பதிவு செய்த நாள்
25
ஜூன்
2022
05:06
கோவில்பாளையம்: கோவில்பாளையத்தில், இன்று திருவாசகம் முற்றோதல் விழா துவங்குகிறது. திருவாசகம் முற்றோதல் கட்டளை சார்பில், கோவில்பாளையம், காலகாலேஸ்வரர் கோவிலில், இன்று மாலை 5:00 மணிக்கு, கயிலை வாத்தியங்களுடன், 63 நாயன்மார்களுக்கு அபிஷேக பூஜை, சிறப்பு வழிபாடு நடக்கிறது. நாளை (26 ம் தேதி) கோவில்பாளையம், தேவம்பாளையம் ரோட்டில் பி.எஸ்.ஆர். மகாலில், காலை 8:00 மணிக்கு திருவாசகம் முற்றோதுதல் துவங்குகிறது, தேருராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் துவக்கி வைத்து பேசுகின்றனர். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிவனடியார்கள் பங்கேற்கின்றனர். காலகாலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் செய்வதற்காக திருவாசக முற்றோதல் நடத்தப்படுகிறது என சிவனடியார்கள் தெரிவித்தனர்.