திருக்கனுார், : கே.ஆர்.பாளையம் செங்கேணியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.திருக்கனுார் அடுத்த கே.ஆர்.பாளையம் கிராமத்தில் விநாயகர், வழிகாட்டி முருகன், செங்கேணியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா பூஜைகள், கடந்த 22ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது.நேற்று காலை 5:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை நடந்தது. காலை 10:00 மணிக்கு மூலவர் கும்பாபிஷேகமும், தொடர்ந்து, அம்மனுக்கு மகா அபிஷேகமும் நடந்தது. விழாவில் அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் துணை சபாநாயகர் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, அமைச்சர் நமச்சிவாயம் தனது சொந்த செலவில், கோவில் திருப்பணிக்காக ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்தை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.