பதிவு செய்த நாள்
25
ஜூன்
2022
05:06
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த, கீழ்விளாகம் கிராமத்தில், கடம்பாடி அம்மன் கோவில், பாப்பாத்தி அம்மன் கோவில் உள்ளது.
அருகில், நெமிலி அகரம் கிராமத்தில் செல்லாத்தம்மன் கோவில் உள்ளது.இக்கோவில்களுக்கு, நெமிலி அகரத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் பூசாரியாக உள்ளார். நேற்று காலை, வழக்கம் போல் கோவிலுக்குச் சென்ற சேகர், கோவில்களின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும், அம்மன் சிலையில் இருந்த தங்க நகைள், உண்டியல் பணம் ஆகியவை திருடு போயிருந்தது தெரிந்தது.தகவலறிந்து வந்த திருவள்ளூர் தாலுகா போலீசார், வழக்கு பதிந்து, திருடு போன நகை, பணம் விபரம் குறித்தும், அதை திருடிச் சென்றோர் குறித்தும், விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர் திருட்டு நடந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.