சேர்வைகாரன்பட்டி கோயில் விழாவில் வினோதம் : தென்னை மட்டை தேரில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2022 03:06
குஜிலியம்பாறை: சேர்வைகாரன்பட்டி மாரியம்மன் கோயில் விழாவில் பொதுமக்கள் சார்பில் 40 அடி உயரத்தில் தென்னை மட்டையால் உருவாக்கப்பட்ட தேரை கொண்டு தேரோட்டம் நடந்தது. கோட்டா நத்தம் ஊராட்சி சேர்வைகாரன்பட்டி மாரியம்மன், பகவதியம்மன் கோயில் திருவிழா மூன்று நாட்கள் நடை பெற்றது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இவ் விழாவில் கரகம் பாலித்தல், வானவேடிக்கை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 6 அடி உயரம் கொண்ட 4 சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டியில் 40 அடி உயரத்தில் தென்னை , வாழை மட்டையால்ஆன மிகப்பெரிய தேரை ப க்தர்கள் உருவாக்க அதன் மூலம் தேரோட்டம் நடந்தது. பொது மக்கள் ஒன்று சேர்ந்து தேரை இழுத்தனர். சுற்றுப்பகுதியை ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சேர்வை காரன்பட்டி முனியாண்டி கூறியதாவது: ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து தென்னை மட்டையால் ஆனால் தேரை உருவாக்க ஒரு நாள் ஆகிவிடும். பிறகு கோயிலை வலம் வந்து முக்கியஊர்களுக்கு சென்று வரும். கரூர் கிருஷ்ணராயபுரம் பகுதி மக்கள் தென்னை, வாழை மர மட்டைகள் வழங்குவர், என்றார்.