பதிவு செய்த நாள்
26
ஜூன்
2022
07:06
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி மாத பிரதோஷ பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, கோவில் கொடிமரத்திலுள்ள அதிகார நந்தி, கிளி கோபுரம் எதிரிலுள்ள சிறிய நந்தி, ஆயிரங்கால் மண்டபம் அருகிலுள்ள பெரிய நந்திக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். பின் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் உற்சவர், மூன்றாம் பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.