பதிவு செய்த நாள்
27
ஜூன்
2022
12:06
உடுமலை: உடுமலை வெஞ்சமடை வாணி நகர் மெய்யகத்தில், பகவான் பாலகிருஷ்ணதாஸ் குருபூஜை விழா நடந்தது.உடுமலை வாணி நகரில், பகவான் பாலகிருஷ்ணதாஸ் சுவாமிகள், மெய்யகம் ஆசிரமம் அமைந்துள்ளது. அங்கு, சுவாமிகளின் 50ம் ஆண்டு முப்பெரும் குருபூஜை பொன்விழா நேற்று முன்தினம் நடந்தது.விழா, கடந்த 24ம் தேதி, மாலை 4:00 மணிக்கு, அய்யன் சன்னதியில் பிரார்த்தனையுடன் துவங்கியது; தொடர்ந்து, பரதநாட்டிய நிகழ்ச்சியும், இரவு, 9:30 மணிக்கு பஜனை நிகழ்ச்சியும் நடந்தது.நேற்று முன்தினம், காலை 6:00 மணிக்கு, தியானம், ஞானப்பாராயனம், அய்யன் சன்னதியில், காலை பிரார்த்தனை, காலை 8:45 மணிக்கு, முப்பெரும் குருபூஜை விழா துவங்கியது.குருவணக்கம், சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.