பதிவு செய்த நாள்
27
ஜூன்
2022
01:06
தியாகதுருகம்: தியாகதுருகம் வடக்கு ஒன்றிய தே.மு.தி.க., சார்பில் விஜயகாந்த் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜை நடந்தது.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தியாகதுருகம் வடக்கு ஒன்றிய தே.மு.தி.க., சார்பில் வடதொரசலூர் கிராமத்தில் உள்ள தான்தோன்றி ஈஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர் தலைமையில் நடந்த பூஜையில் மூலவர் லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி வழிபாடு செய்தனர். மாநில தொழிற்சங்க செயலாளர் தாமுசக்திவேல், மாவட்ட அவைத்தலைவர் கோவி முருகன், ஒன்றிய அவைத்தலைவர் முத்து, பொருளாளர் முத்து, துணை செயலாளர் சங்கர், இளைஞரணி செயலாளர் ஏழுமலை, சுப்புராயன், வேலு உள்பட நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.