பதிவு செய்த நாள்
27
ஜூன்
2022
01:06
கோவை:உண்மையான விஸ்வாசம் இருந்தாலே பகவான் எப்போதும் நம்மோடு இருப்பார், என, விட்டல் ருக்மணி சமஸ்தான தலைவர் ஸ்ரீ விட்டல் தாஸ் மகராஜ் பேசினார்.கோவை ராம்நகர் ஐயப்ப பூஜா சங்கத்தில், நாமசாகர் எனும் தலைப்பில் தஞ்சாவூர் கோவிந்தாபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தானத்தின் தலைவர் ஸ்ரீ விட்டல் தாஸ் மகராஜின், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி, கடந்த, 22ம் தேதி துவங்கியது. நிறைவு நாளான நேற்று, பகவானின் சிறப்பை பக்தர்களுக்கு விளக்கும் விதமாக நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்தில் நடனமாடியும், கைதட்டியும் வழிபாடு செய்தனர்.ஸ்ரீ விட்டல் தாஸ் மகராஜ் நேற்று பேசுகையில்,இன்றைய சூழலில் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் வேதத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். அவ்வாறு கற்றுக்கொண்ட வேதங்களை அப்படியே மனதில் வைத்திருப்பது அவசியமாகும். நம்மால் முடிந்ததை பிறருக்கு கொடுத்து வாழ வேண்டும். எந்த சூழலிலும் பிறர் நம்மீது வைக்கும் விமர்சனங்களை கண்டுகொள்ளாமல், நமக்கான பாதையில் முழு முயற்சியோடு பயணித்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். உண்மையான விஸ்வாசம் இருந்தாலே பகவான் எப்போதும் நம்மோடு இருப்பார், என்றார்.