கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் செப்பு தகட்டில் ராமர் நாமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2022 02:06
சின்னசேலம் : சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் செப்புதகடில் ராமா, ராமா என்ற நாமம் எழுதி அயோத்திக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
உத்திரப் பிரதேச மாநிலம், அயோத்தி நகரில் ரூ.1,100 கோடி செலவில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இதையொட்டி,சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், செப்பு தகடில் ராமர் நாமம் எழுதும் பணி நேற்று நடந்தது.ஆர்ய வைசிய சமூகத்தைசேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், 4,400 செப்பு தகடுகளில் ராமா, ராமா என்று நாமத்தை எழுதி ஆர்ய வைசிய சங்கத்திடம் நேற்றுஒப்படைத்தனர். தொடர்ந்து அனைத்து செப்பு தகடுகளும் அயோத்தி ராமர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.