கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தில் நுாற்றாண்டை கடந்த பழமைவாய்ந்த சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவில் திருப்பணி செய்ய கிராம மக்களால் முடிவு செய்யப்பட்டு, கடந்த 5 ஆண்டுகளாக திருப்பணிகள் நடந்து வந்தது. மாரியம்மன், மூலஸ்தான கல்கோபுரம், கல் மண்டபம் ஆகியவற்றை துறையூர் ஸ்தபதி வேணுகோபால் குழுவினர் வடிவமைத்துள்ளார்.மூன்று நிலையில் 5 கலசங்களுடன் 45 அடி உயரத்தில் ராஜ கோபுரமும் பண்ருட்டி ஸ்தபதி தனபால் வடிவமைத்துள்ளார். 5 ஆண்டுகளாக நடந்து வந்த திருப்பணிகள் தற்போது நிறைவுபெற்று கோவில்கள் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. ஆவணி மாதத்தில் கும்பாபிேஷகம் செய்வதற்கான ஏற்பாடுகளை நீலமங்கலம் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.தொடர்ந்து மாரியம்மன் கோவில் அருகில் நவநீதகிருஷ்ணன் ஆலயம், கிராம எல்லையில் பெரியாண்டவர் கோவிலும் புதிதாக கட்டப்பட்டுள்ளது. கெங்கை அம்மன் கோவிலின் சீரமைப்பு பணிகளும் நடத்தப்பட்டுள்ளது.