கோட்டையம்மன் கோவில் பொங்கல் விழா ஜூலை 18 ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2022 02:06
தேவகோட்டை: தேவகோட்டை எல்லை காவல் தெய்வம் கோட்டையம்மன் கோவில். நகர் எல்லையில் இருக்கும் இக்கோவிலிலிருந்து ஆடி மாதம் முதல் திங்கட்கிழமை பிடிமண் எடுத்து வரப்பட்டு தி.ஊரணி அருகே உள்ள கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு செவ்வாய்க்கிழமை காப்புகட்டுதலுடன் துவங்கும். இந்தாண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு ஜூலை 18ல் மாலை 6 மணிக்கு மேடை போடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 19 ந்தேதி முதல் செவ்வாய்க்கிழமை முதல் பொங்கலுடன் விழா துவங்குகிறது. 22 ந்தேதி பால்குடம், பூத்தட்டு நடக்கிறது. 26 ந்தேதி மக்களின் புள்ளி பொங்கல் வைக்கப்படுகிறது. இத்திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் , கடைக்காரர்கள் பிளாஸ்டிக் பைகளில் தேங்காய் பழம், பூ கொடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், இலைகளிலோ, துணிப்பைகளிலோ , வேறு மாற்று (கூடை) வகைகளிலோ கொடுத்து தேவகோட்டை சுற்றுப்புற சூழலை காத்து கோவிலின் தூய்மையை காக்க வேண்டும் என இயற்கை இறைப்பணிக்குழு சார்பாக வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.