Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அன்றாட வாழ்வில் ஆத்திச்சூடி சமேத அல்லது உடனுறை என்பதன் பொருள் ...
முதல் பக்கம் » துளிகள்
மஹாபெரியவர் என்னும் மாமருந்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2022
04:06


திருத்தணியைச் சேர்ந்தவர் டாக்டர் அண்ணாமலை. அவரது மகன் இதயக்கோளாறால் அவதிபட்டான்.  சாப்பிட்டதும் உணவு வயிற்றில் தங்காமல் வாந்தி வந்து விடும். சிகிச்சை செய்தும் குணமாகவில்லை.  காஞ்சி மஹாபெரியவரை தரிசிக்கும்படி நண்பர்கள் அறிவுறுத்தினர். அதனை ஏற்று மடத்திற்கு வந்தவர், சுவாமிகளின் முன் மகனைக் கிடத்தினார். சுவாமிகள் தீர்த்தம் கொடுத்தார். சாறு பிழிந்து தரும்படி ஆரஞ்சுபழம் ஒன்றைக் கொடுத்து, ‘‘கவலை வேண்டாம். நாளடைவில் இவன் குணம் அடைவான்’’ என்று ஆசியளித்தார். அன்று முதல் சிறுவனின் உடல்நிலை தேறத் தொடங்கியது. அன்றாடப் பணிகளை தானே செய்யும் அளவிற்கு முன்னேறினான். இதன்பின் காஞ்சி மஹாபெரியவரின் பக்தராக மாறிய அண்ணாமலை ஆந்திராவில் உள்ள ‘புக்கை’ சங்கர மடம், காஞ்சி மடத்திற்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தார். ஆண்டு தோறும் சங்கர ஜயந்தி விழாவை முன்நின்று நடத்தினார்.  
   இவரைப் போலவே மஹாபெரியவரின் பக்தராக விளங்கியவர் சுந்தரம். வயிற்றுவலியால் அவதிப்பட்ட அவருக்கு குடல்புண் இருப்பதாகவும், அறுவை சிகிச்சை அவசியம் என்றும் மருத்துவர்கள் கூறினர்.
மஹாபெரியவரைத் தரிசிக்க மனைவியுடன் காஞ்சிமடத்திற்குச் சென்ற சுந்தரம், ‘‘ பெரியவா... அல்சரால் அவதிப்படுறேன். ஆப்ரேஷன் செய்ய மனமில்லை. தாங்கள் தான் வழிகாட்ட வேண்டும்’’ என்றார்.
‘‘மருந்து சாப்பிடு! சீக்கிரம் குணம் பெறுவாய்’’ என ஆசியளித்தார். ஆரஞ்சுப்பழம் கையில் வைத்தபடி சிறிதுநேரம் கண்களை மூடி தியானித்தார். ‘‘இந்த பழத்தை இரவு துாங்கும் முன் இன்று சாப்பிடு’’ எனக் கொடுத்தார். அதன் பின்னர் அறுவை சிகிச்சைக்கு தேவை இல்லாமல் போனது. மருத்துவரால் ஆகாததும், மஹாபெரியவரால் சாத்தியமாகும் எனில் அவரது அற்புத சக்தியை யாரால் அளக்க முடியும்? 

 
மேலும் துளிகள் »
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூரில் அமைந்து உள்ளது திரு மல்லேஸ்வரா கோவில். சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா மங்களூரு தாலுகாவில் உள்ளது இனோலி கிராமம். இப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்று ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா மாவட்டம், புராதன கோவில்களுக்கு பெயர் பெற்றது. இதில் பன்ட்வால் தாலுகாவின் பொளலி ... மேலும்
 
temple news
ராம்நகர் மாவட்டம் கனகபுராவின் கப்பாலு கிராமத்தில் அமைந்து உள்ளது ஸ்ரீ கப்பாலம்மா கோவில். இங்கு சக்தி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar