தஞ்சாவூர், கும்பகோணம் அருகே சிவபுரம் சிவகுருநாதசுவாமி கோவலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதை சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எடுக்க வலியுறுத்தி, அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவினர் முதல்வர், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு தபால் மூலம் மனு அளித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தலைமை தபால் நிலையத்தில் இருந்து, தபால் மூலம் அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராம.நிரஞ்சன் உள்ளிட்டோர் அனுப்பிய மனுவில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சிவபுரத்தில் சிவகுருநாதசுவாமி கோவிலின் சொத்துகளை அனுபவித்து வரும் பலரும் வரி செலுத்தாமல் ஏமாற்றி வருகிறார்கள். இக்கோவிலுக்கு 90 லட்சத்திற்கு மேல் நிலுவை பாக்கி உள்ளது. எனவே, அதை வசூல் செய்ய வேண்டும். இக்கோவிலில் நடராஜர் சிலை திருடப்பட்டு மீண்டும் மீட்கப்பட்டு, தற்போது திருவாரூர் சிலை பாதுகாப்பு மையத்தில் எந்த ஒரு பூஜையும் இல்லாமல் உள்ளது. அந்த சிலையை மீண்டும் கோவிலில் வைத்து வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும், சோமஸ்கந்தர் உற்சவர் சிலை மீட்கப்பட்டதாக செய்தித்தாள்களில் வெளியாகி உள்ளது.அந்த சிலையையும் மீண்டும் கோவிலில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாலயத்தில் கொடிமரம் வைப்பதற்கான கல் துண் இருந்த போதும் இதுவரை கொடிமரம் வைக்காமல் இருக்கிறது. இது வைத்ததற்காக பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தேய்பிறை அஷ்டமி தவிர மற்ற நாட்களில் எந்த ஒரு பூஜையும் சரியாக நடைபெறவில்லை. அர்ச்சனைக்கு அபிஷேகத்திற்கு எந்த ஒரு ரசீதும் கொடுக்கப்படவில்லை. பக்தர்கள் அனைவருக்கும் உரிய ரசீது கொடுத்து ஆலயத்தை வளர்ச்சி அடைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை மனுவை அனுப்பி வைத்தனர்.