பதிவு செய்த நாள்
28
ஜூன்
2022
02:06
ஆறுமுகநேரி: ஆறுமுகநேரி, சுந்தரி அம்மன் நாதசுவாமி கோயில் ஆனி உத்திரப் பெருந்திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆனிஉத்திரப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, காலை யில் ஹாகணபதி ேஹாமமும், மாலையில் நால்வர் சுவாமிகள் புறப்பாடும் நடந்தது. அதிகாலை 5.:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது . கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடந்தது. கோயில் மணியம் சுப்பையா, பக்த ஜன சபை அரிகிருஷ்ணன், நகர் நல மன்ற தலைவர் பூபால்ராஜன், தொழிலதிபர் தவமணி, அதிமுக., முன்னாள் நகர செயலாளர் அமிர்தராஜ், சைவ வேளாளர் சங்க தலைவர் சங்கரலிங்கம், லயன்ஸ் கிளப் தலைவர் நடரா ஜன் கலந்து கொண்டனர். நாளை குடவரு வாயில் தீபாராதனை, ஜூலை 2ம் தேதி 7ம் திருவிழா அன்று காலை சிவகாமி அம்பாள் உடனுறை நடராஜர் மூர்த்தி காப்புகட்டுதல், உருகு சட்டசேவை. ஜூலை 3ம் தேதி காலை நடராஜ மூர்த்தி வெண் பூஞ்சப்பரத்தில் வெண்பட்டு உடுத்தி சாத்தி திருவீதி உலாவும் , இரவில் பச்சைசாத்தி திருவீதி உலாவும் நடக்கிறது. வரும் 5ம் தேதி 10ம் திருவிழா நடைபெறும்.