பதிவு செய்த நாள்
28
ஜூன்
2022
10:06
பல்லடம்: பல்லடம் வட்டார கோவில்களில், அமாவாசை வழிபாடு நேற்று சிறப்பாக நடந்தது.
பல்லடம் அடுத்த, சித்தம்பலம் நவகிரக கோட்டையில், ஆனி மாத அமாவாசை வழிபாடு நடந்தது. மகா மிருத்தியுஞ்ஜய வேள்வி வழிபாடும், இதையடுத்து, 108 சங்குகளில் வைத்து பூஜிக்கப்பட்ட தீர்த்தங்கள் மூலம் பக்தர்கள் நவகிரகங்கள், மற்றும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன் அம்மையப்பராக சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. இதேபோல், பல்லடம் வெங்கிட்டாபுரத்தில் உள்ள அதர்வண பத்ரகாளி பீடத்திலும், அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று முன்தினம், தோஷங்கள், பில்லி சூனியம், கஷ்டங்களை போக்கும் நிகும்பலா யாகமும், நேற்று, அமாவாசை சிறப்பு வேள்வியும் நடந்தது. தொடர்ந்து, தங்கக் கவச அலங்காரத்தில் ஸ்ரீப்ரத்தியங்கிரா தேவி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.