மயிலம்: மயிலம் கோவிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு நாளை சிறப்பு வழிபாடு நடக்கிறது.மயிலம் வள்ளி, தெய்வானை சுப்ரமணியர் சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழாவையொட்டி நாளை (10ம் தேதி) காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேகம், வழிபாடுகள் நடக்கிறது.தொடர்ந்து 11 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், பலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இரவு 9 மணிக்கு மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கிரிவலம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20ம் பட்ட சுவாமிகள் செய்துள்ளார். இதேபோல் மயிலம் அடுத்த தென்பசியார் கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில் நாளை ஆடி கிருத்திகை விழா நடக்கிறது. காலை 8 மணிக்கு மஞ்சள் இடித்தல் மிளகாய் அபிஷேகம், காவடி பூஜைகள் மற்றும் பால்குடம் ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.