நெல்லையப்பர் கோயிலில் பக்தர்களுக்கு வழி ரூ.4.15 லட்சம் செலவில் பணிகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2012 10:08
திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயில் அர்த்த மண்டபத்தில் சுவாமியை பக்தர்கள் தரிசிக்க வசதியாக தனித்தனி வழி ஏற்படுத்தும் பணிகள் ரூ.4.15 லட்சம் செலவில் துவங்கப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோயில் சுவாமி சன்னதியில் அர்த்தமண்டபத்திற்குள் செல்ல பக்தர்களிடம் 3 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதை எதிர்த்து இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர். சமீபத்தில் நெல்லை வந்த அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தனிடம் இதுகுறித்து இந்துமுன்னணியினர் புகார் செய்தனர். அர்த்த மண்டபத்தில் கட்டண தரிசனம், தர்ம தரிசனம் என தனித்தனியாக வழி ஏற்படுத்த அமைச்சர் ஆனந்தன் உத்தரவிட்டார். இதையடுத்து ரூ.4.15 லட்சம் மதிப்பீட்டில் 101 மீட்டர் நீளத்திற்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பைப்பில் க்யூ லைன் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான டெண்டர் விடப்பட்டது. பவானியை சேர்ந்த நிறுவனத்தினர் டெண்டர் எடுத்து பணிகளை துவக்கியுள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில் பணிகள் முடிவடைந்ததும் தனித்தனி வரிசை ஏற்படுத்தப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.