பதிவு செய்த நாள்
09
ஆக
2012
10:08
மதுராந்தகம் : மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில், மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை மற்றும் பூஜைகள் நடந்து வருகின்றன. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், அமாவாசை, பவுர்ணமி, ஆகிய நாட்களில், மழைவளம் பெருகி நீர் நிலைகள் நிரம்பவும், இயற்கைச் சீற்றங்கள் தணிந்து வளங்கள் தழைக்கவும், உலகில் அமைதி நிலவவும், சிறப்பு பூஜைகள் மற்றும் கலச விளக்கு பூஜை நடைபெறும். கடந்த இரு மாதங்களாக தினமும் மாலை ஒரு மணி நேரம், மழை வேண்டி, மந்திரங்கள் கூறி கூட்டு பிரார்த்தனை நடைபெறுகிறது. இதேபோல், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், மழை வேண்டி சிறப்பு பூஜைகள், கலச விளக்கு வேள்வி பூஜைகள் நடைபெற உள்ளன.