பதிவு செய்த நாள்
02
ஜூலை
2022
04:07
மதுராந்தகம்:மதுராந்தகம் கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, தேர் பழுது பார்க்கும் பணி நடக்கிறது.
மதுராந்தகத்தில் பிரசித்தி பெற்றது, ஏரி காத்த ராமர் எனும் கோதண்டராமர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.வைணவ தலங்களில் ஒன்றான இக்கோவிலில், வேறெங்கும் காண முடியாத, மூலவர் சன்னிதியில் ராமர், சீதையை கைபிடித்தவாறு திருமணக்கோலத் தில் அமைந்திருப்பது சிறப்பு. இக்கோவில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா, வரும் 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 12 நாட்கள் நடக்கும் விழாவில் காலை, மாலை என, இரு வேளைகளிலும், பல்வேறு வாகனங்களில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுவாமி வீதியுலா வருவார். விழாவின் மூன்றாம் நாளில் கருட சேவை, ஏழாம் நாளில் வெள்ளித் தேரில் ராமபிரான் வீதி உலா வருகிறார்.வரும் 13ல் பெரிய தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி, தேர் பழுது பார்க்கும் பணியில், கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக, இரு ஆண்டுகளாக தேரோட்டம் நடக்கவில்லை. இயல்பு நிலை காரணமாக, இந்தாண்டு சிறப்பு முறையில் திருவிழா நடத்த, கிராமத்தினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.