Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ... நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா: கொடியேற்றத்துடன் துவங்கியது நெல்லையப்பர் கோயில் ஆனிப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இந்தியா ஆன்மிக பூமி, அமரத்துவம் வாய்ந்த பூமி என்ற விவேகானந்தர் நினைவு நாள் இன்று!
எழுத்தின் அளவு:
இந்தியா ஆன்மிக பூமி, அமரத்துவம் வாய்ந்த பூமி என்ற விவேகானந்தர் நினைவு நாள் இன்று!

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2022
08:07

மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1863 ஜன., 12ம் தேதி பிறந்தவர், விவேகானந்தர். இயற்பெயர், நரேந்திரநாத் தத்தா.கல்லுாரியில் தத்துவம் பயின்றவர், இறைவன் குறித்த கேள்விகளுடன் சென்று, ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தார்; அவரின் போதனைகளை கேட்டு, சீடரானார். ராமகிருஷ்ணரின் மரணத்திற்கு பின், இந்தியாவை உணர்ந்து கொள்ள, நாடு முழுதும் பயணம் மேற்கொண்டு, கன்னியாகுமரியில், கடல் நடுவே உள்ள பாறையில், மூன்று நாட்கள் தியானம் செய்தார்.கடந்த, 1893ல், அமெரிக்காவில் நடந்த, உலக மதங்களின் மாநாட்டில், ஹிந்து சார்பாக பங்கேற்றார். சிகாகோவில், அவர் உரையாற்றிய பின், ஹிந்து கருத்துகளுக்கு, உலக அரங்கில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அவர் நிறுவிய, ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம், உலகம் முழுதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகின்றன. 1902 ஜூலை, 4ம் தேதி இறைவனடி சேர்ந்தார். வீரத்துறவி விவேகானந்தர் காலமான தினம் இன்று!

விவேகானந்தர் மறைவதற்கு முன் உலகிற்கு வழங்கிய கடைசி உபதேசம் இது: இந்தியா ஆன்மிக பூமி, அமரத்துவம் வாய்ந்த பூமி. உலக வரலாற்றில் சில நாடுகள் சில சமயங்களில் எழுச்சி பெற்றிருக்கும்; உலக வரலாற்றில் சில சமயங்களில் சில நாடுகள் வீழ்ச்சி பெற்றிருக்கும். ஆனால் இந்தியா அமரத்துவம் வாய்ந்த பூமி. இறைவனைத் தேடுவதிலேயே ஈடுபட்டால் இந்தியா என்றும் வாழும்.

சுவாமி விவேகானந்தரின் தேச பக்திக்குள்ள ஓர் ஈடு இணையற்ற தனி சிறப்பு, அவருடைய ஆன்மிக அனுபூதியில் தான், மகத்தான தவ வலிமையில் தான் அடங்கியிருந்தது. அதனால் தான் அவரால் சமயம், சமுதாய துறைகளில் குறிப்பிடத்தக்க நிலையான ஒரு மறுமலர்ச்சியை ஒரே நேரத்தில் ஏற்படுத்த முடிந்தது. இந்த இரண்டு துறைகளில் ஏதாவது ஒன்றில் குறிப்பிடத்தக்கவர்களாக நாம் பலரை சொல்ல முடியும். ஆனால் அவை இரண்டிலும் குறிப்பிடத்தக்கவர்களாக மகாத்மா காந்திஜியை போல ஒரு சிலரை மட்டுமே கூற முடியும். அவர்களில் விவேகானந்தருக்குதான் முதலிடம் உண்டு

விவேகானந்தர் 1863 ஜனவரி 12 ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார்.

இறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். ராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இராமகிருஷ்ணரின் போதனைகள், உருவ வழிபாடு, அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது.

துறவறம்: 1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர். அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்படிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார்.

மறைவு: 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் இறைவனுடன் கலந்தார். இன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நேற்று துவங்கியது.கேரள மாநிலத்தின் ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயிலில் ரஷ்யாவைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து பித்தளை வேல் காணிக்கையாக ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உலக நன்மைக்காக பவித்திர பூஜையில் ஏராளமானோர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் கார்த்திகை மாத பிரதோஷம், அமாவாசை ... மேலும்
 
temple news
அழகர்கோவில்; கள்ளழகர் கோயிலில் நேற்று உண்டியல் திறப்பு நடந்தது. இணை கமிஷனர் செல்லதுரை, உதவி கமிஷனர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar