நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா: கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2022 08:07
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 11ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் ஆனிப்பெருந்திருவிழாவில் தேரோட்டம் நடக்கும். நெல்லையப்பர் தேர் தமிழகத்தின் உயரமான தேர்களில் ஒன்றாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பினால் தேரோட்டம் நடக்கவில்லை. இந்த ஆண்டு ஆனி பெருந்திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. நேற்று காலை 8:00 மணி அளவில் சுவாமி சன்னதி முன்பாக உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் காலை மாலை சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்தி களுக்கு அபிஷேகம் அலங்கார ஆராதனையும் வீதியுலாவும் நடக்கிறது.