சித்தாமூர் : பெரியகயப்பாக்கம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் வசந்த திருவிழாவின் முக்கிய நிகழ்சியான துரியோதனன் படுகளம் நேற்று விமரிசையாக நடைபெற்றது.
சித்தாமூர் அருகே பெரியகயப்பாக்கம் கிராமத்தில் குளத்தின் அருகே திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. திரவுபதி அம்மன் கோவில் வசந்த திருவிழாவை முன்னிட்டு ஜூன் 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று மாலை 3:30 மணியளவில் திரவுபதி அம்மன் கோவில் வசந்த திருவிழாவின் முக்கிய நிகழ்சியான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.பின் கூந்தல் முடித்து, திரவுபதி அம்மனுக்கு பூச்சூட்டும் நிகழ்ச்சி நடந்தது.மாலை 6:30 மணியளவில் தீமிதி விழா நடந்தது. பூங்கரகம் அலங்கரித்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்த பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர்.இன்று, பட்டாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் மற்றும் உபயதாரர்கள் செய்தனர்.