200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூலாம்பாடி திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2022 04:07
பெரம்பலுார்: பூலாம்பாடி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரபுவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை வெகு விமர்சையாக நடக்கிறது.
பெரம்பலுார் மாவட்டம், பூலாம்பாடி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த நுாறாண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், கோவில்கள் சிதிலமடைந்ததால் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கோவிலை சீரமைக்க கிராம மக்கள் முடிவு செய்தனர். இதையொட்டி கிராமத்தைச் சேர்ந்த மலேசிய தொழிலதிபரான டத்தோ பிரகதீஷ் குமார் உதவியுடன் திரவதி அம்மன் கோவில் ராஜகோபுரம், செல்வ விநாயகர் கோயில், தர்மராஜா சுவாமி கோவில், அரவான் சுவாமி கோவில், போத்த ராஜா சுவாமி கோவில், கிருஷ்ணர் கோவில் பலிபீடம் மற்றும் கொடி மரங்கள் உள்ளிட்ட பல்வேறு வேலைபாடுகளுடன் கோவில் திருப்பணிகள் நடந்தது.
திருப்பணிகள் நிறைவு பெற்றது. நேற்று இளம் காளியம்மன் சக்தி அளிக்கும் இடத்திலிருந்து 126 தீர்த்த குடங்கள் மற்றும் 251 முளைப்பாரிகளை பக்தர்கள் எடுத்துக்கொண்டு மங்கள இசை உடன் யாகசாலைக்கு வந்தனர். இதை தொடர்ந்து யாக சாலை பூஜை நடந்தது. இன்று இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை நடக்கிறது. ஆறாம் தேதி அதிகாலை நாலாம் கால பூஜை நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி நாளை காலை 6 45 முதல் 725 மணிக்குள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை வழங்க நடைபெற உள்ளது. தொடர்ந்து சுவாமிகளுக்கு தீபாரதனை நடக்கிறது. மேலும் கும்பாபிஷேக விழாவை ஒட்டி பகுதியில் ஆறு இடங்களில் அன்னதானம் நடக்கிறது. விநாயகர் யாகசாலை தொழிலதிபர் பிரகதீஷ் குமார் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.