கானாடுகாத்தான் சவுந்தரநாயகி கைலாசநாதர் கோயிலில் பிரமோற்சவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2022 08:07
காரைக்குடி: காரைக்குடி அருகேயள்ள கானாடுகாத்தான் சவுந்தரநாயகி கைலாசநாதர் கோயில் தேரோட்டம் ஜூலை 10ம் தேதி நடக்கிறது.
காரைக்குடி அருகேயள்ள கானாடுகாத்தான் சவுந்தரநாயகி கைலாசநாதர் கோயில் பிரமோற்சவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா விமரிசையாக நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு திருவிழா, கடந்த ஜூலை 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சவுந்தரநாயகி கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தினமும் சுவாமி வெள்ளி கேடயம், குதிரை, ரிஷபம், கைலாச, அன்ன உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. காலையில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும் இரவு சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், ஜூலை 10ஆம் தேதியும், ஜூலை 12ஆம் தேதி தெப்ப திருவிழாவும் நடைபெறுகிறது.