மயிலாடுதுறை: குத்தாலம் அருகே கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீ வள்ளியப்ப கூத்தர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வானாதி ராஜபுரம் அருகே ரெட்டி கடலங்குடி கிராமம் அமைந்துள்ளது எங்கு பழமை வாய்ந்த எல்லை தெய்வமான பூரண புஷ்களாம்பாள் சமேத வள்ளியப்ப கூத்தர் என்றழைக்கப்படும் அய்யனார் கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 3ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும் 4-ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது இன்று காலை நான்காம் கால யாக சாலைகள் முடிவடைந்து பூர்ணாஹூதி, மகா தீபாராதனைகள் நடைபெற்றன தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு அதிர்வேட்டுகள் முழங்க ,மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரம் ஓத கோயிலை வலம் வந்து சுவாமி, அம்பாள் சன்னதி விமானத்தை வந்தடைந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கடத்திலிருந்த புனித நீரை விமான கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து வள்ளியப்ப கூத்தர், பூரண புஷ்களாம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் மற்றும் பூஜைகளை திருவேள்விக்குடி வைத்தியநாத சிவாச்சாரியார் தலைமையிலானோர் செய்துவைத்தனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழாக் குழு தலைவர் பாஸ்கரன் தலைமையில் கிராமவாசிகள், குலதெய்வகாரர்கள் செய்திருந்தனர்.