பரமக்குடி: பரமக்குடியில் உள்ள சிவன் கோயில்களில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது. பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில், சிவகாமி சுந்தரி சமேத நடராஜர் அருள் பாலிக்கிறார். இக்கோயிலில் உற்சவருக்கு நேற்று காலை 7:00 மணி தொடங்கி, மஞ்சள், திரவியம், இளநீர், பால், பஞ்சாமிர்தம் என பல வகையான அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்திற்கு பின் அலங்கார தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டன. இங்குள்ள மூலவருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா தரிசனத்தின் போது அபிஷேகம் நடப்பது வழக்கம். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.
*இதேபோல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அருள் பாலிக்கும் உற்சவர் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.