பட்டிவீரன்பட்டி: சேவுகம்பட்டி சோலைமலை அழகர் கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக பணிகளை துவக்க பாலாலயம் நடந்தது.
கிராமத்தினர் மூன்று ஆண்டுகளாக கும்பாபிஷேகம் செய்வதற்காக இந்து சமய அறநிலைத்துறையை நாடினர். கடந்த காலங்களில் இதற்கான உத்தரவு கிடைக்கவில்லை. தற்போது கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான அரசாணை கிடைத்ததால் ரூ. 70 லட்சம் மதிப்பில் ராஜகோபுரம் வைத்து மண்டபங்கள் அமைத்து பல்வேறு அம்சங்களுடன் கோவிலை புதுப்பிக்கும் பணி துவங்க உள்ளது. நேற்று பாலாலயம் வேள்வியுடன் புனித நீர் தெளிக்கப்பட்டு சிலைகள் பத்திரமாக எடுத்து வைக்கப்பட்டன. இதில் பக்தர்கள் தி.மு.க., நகர செயலாளர் தங்கராஜ், இந்து சமய அறநிலைத்துறை துணை ஆணையர் கிருஷ்ணன், செயல் அலுவலர் ராமதிலகம், ஆய்வாளர் பிரவீன் குமார் உட்பட பலர் பங்கேற்றனர். தாடிக்கொம்பு ஜெகநாத பட்டர் பூஜைகளை நடத்தினார்.