திருப்பட்டினத்தில் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2022 03:07
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் பகுதியில் உள்ள ஸ்ரீ மையாடுங்கண்ணி அம்பிகா சமேத ஜடாயுபுரீஸ்வர ஸ்வாமி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இக்கோவிலில் 14ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜையும்,முதல் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று 4ம் கால யாகசாலை பூஜை முடிவுற்று மகா பூர்ணாஹதி நடைபெற்றது தொடர்ந்து மங்கள வாத்தியங்களுடன் சிவவாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை சுமந்து ஆலயத்தை வலம் வந்து வேதமந்திரங்கள் ஆலய விமானங்கள் மற்றும் மூலவர்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.