மாசாணி அம்மன் கோவில் விழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2022 04:07
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே அளிந்திக்கோட்டை மாசாணி அம்மன் கோவில், குண்டம் திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் தொடர்ச்சியாக, நேற்று மாலை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ஜூலை 15 ல் தீர்த்தம் மற்றும் பூ கரகம் எடுக்கும் விழாவும், மறுநாள் நள்ளிரவில் மயான பூஜைகளும் நடைபெற்று, ஜூலை 17 ல் பால்குடம், காவடி, எடுத்து தீ மிதித்தலுடன், முக்கிய விழாவான குண்டம் விழா நிறைவடைகிறது. விழாவை முன்னிட்டு, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.