அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே அ.கோவில்பட்டி மீனாட்சிபுரம் முத்தாலம்மன், கருப்பண சுவாமி, விநாயகர் கோயில் முப்பெரும் உற்ஸவ விழா நடந்தது. மஞ்சமலை சுவாமிக்கு கனி மாற்றுதல், அம்மன் கண் திறக்கப்பட்டு, பூ அலங்காரத்துடன் சன்னதி அடைந்தார். முளைப்பாரி, மாவிளக்கு, அக்னிச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். சுவாமிக்கு கிடாய் வெட்டி பொங்கல் வைத்து வழிபட்டனர். ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.