வேம்பார்பட்டி காளியம்மன் கோவில் திருவிழா : பூஞ்சோலை சென்ற அம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2022 04:07
கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டி காளியம்மன், பகவதி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.
விழாவையொட்டி கடந்த ஜூன் 28 சாமி சாட்டுதல் மற்றும் பக்தர்கள் காப்பு கட்டுகளுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு தினசரி அபிஷேக அலங்காரங்கள் நடந்தது. ஜூலை 4 அம்மனுக்கு பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்தல் நடந்தது. ஜூன் 5 கொடியேற்றம், கிராம தேவைகளுக்கு பழம் வைத்து வழிபடுதல், அம்மன் அலங்கார பெட்டி எடுத்துச் செல்லுதல், தொடர்ந்து வான வேடிக்கையுடன் அம்மன் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். விழாவின் நிறைவாக நேற்று மேளதாளம் முழங்க, பக்தர்கள் ஆரவாரத்துடன் மஞ்சள் நீராட்டுடன் அம்மன் நகர வளம் வந்து பூஞ்சோலை சென்றடைந்தல் நிகழ்ச்சி நடந்தது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.