அவிநாசி: வீர ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ பூமி நீள நாயகி சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவில்கள் ஆறாம் ஆண்டு விழா, நடைபெற்றது.
அவிநாசியில், அமைந்துள்ள விர ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ பூமி நீள நாயகி சமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில்களில், ஆறாம் ஆண்டு விழாவை முன்னிட்டு விசேஷ மூல மந்திர ஹோமம் நடைபெற்றது. மேலும்,சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடைபெற்று பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில்,வீர ஆஞ்சநேயர் மற்றும் கரி வரதராஜ பெருமாள் அருள் பாலித்தனர். ஆறாம் ஆண்டு விழாவை முன்னிட்டு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.