சக்கரத்தாழ்வார் சுவாமிக்கு சுதர்ஷன ஜெயந்தி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2022 01:07
பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், சக்கரத்தாழ்வாருக்கு நேற்று முன்தினம் சுதர்ஷன ஜெயந்தி சிறப்பு வழிபாடு நடந்தது.ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் சுதர்சன ஆழ்வார் என்ற சக்கரத்தாழ்வார் அவதரித்த நாளான்று சுதர்சன ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். நேற்று முன்தினம் நடந்த விழாவையொட்டி, மாலை 6:30 மணியளவில் மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிேஷகம், இரவு 7:00 மணியளவில் மூலவர் சுவாமிகள், சக்கரத்தாழ்வாருக்கு மகா தீபாராதனை நடந்தது.பின்னர், உலக மக்கள் நலன்பெற வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடி, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.