விளாத்திகுளம்: விளாத்திகுளம் அருகே, கே.சுப்பையாபுரம் கிராமத்தில், கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்றுத் திருவிழா நடந்தது. விளாத்திகுளம் அருகே கே.சுப்பையாபுரம் கிராமத்தில், ராஜராஜேஸ்வரி செண்பகவள்ளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி திருவிழா, 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான ஆனி விழாவானது, கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. நேற்று இக்கோயிலின் விசேஷ திருவிழாவான சேற்றுத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் கிராமத்தை சேர்ந்த ஆண்கள், பெண் உடைகளை அணிந்து வேடமிட்டு, தங்களது உடம்பில் சேற்றைப் பூசிக் கொண்டு, கைகளில் வேப்பிலையை ஏந்தியவாறு ஊரிலுள்ள பொது கண்மாயில் இருந்து துவங்கி கிராமம் முழுவதும் சுற்றி இறுதியில் கோயிலை வந்தடைந்தனர். இதேபோல், பெண்கள் மஞ்சள் நீரை எடுத்துக் கொண்டு, ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.