திருநகர்: மதுரை விளாச்சேரியிலுள்ள சைதன்ய விட்டல் மந்திர் வேத பாடசாலையில் ஆஷாட ஏகாதசியை முன்னிட்டு உலக நன்மைக்காக பூஜைகள் நடந்தது. யாக பூஜைகள் முடிந்து மூலவர்கள் பாண்டுரங்கன், ருக்மணிக்கு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் நடந்தது. காலை ஆறு முதல் மாலை ஆறு மணி வரை ஹரே ராமா ஹரே கிருஷ்ணா மந்திரம் ஜெபிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.. வேத பாடசாலையில் நூறு நாட்கள் ஸ்ரீக்ருஷ்ண மந்திர கோடி மஹா யக்ஞம் நடக்கிறது. பூஜையில் பங்கேற்கும் உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். என பாடசாலை நிர்வாகிகள் தெரிவித்தனர்.