ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி வீர ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது 3 நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் முதல் நாளில் பள்ளி மாணவ மாணவிகள் பரதநாட்டியம் மற்றும் பன்முக கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 2ம் நாள் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து பூஜை பிரவேச பலி, வேதிகா பூஜை, பூர்ணாஹூதி நிகழ்ச்சிகளும், 3ம் நாளில் கடம் புறப்பாடு, யாத்ரா தானம் அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாரதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.