பதிவு செய்த நாள்
11
ஜூலை
2022
05:07
செஞ்சி: அம்மாகுளம் சிவசக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
அம்மாகுளம் ஸ்ரீ சிவசக்தி விநாயகர் வள்ளி தேவசேனா உடனுறை திருக்கல்யாண சுப்ரமணியர், சிவபெருமான் கோவில் ஜுர்ணோத்தாரன மகா கும்பாபிஷேகம் இன்று நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு கணபதி, லட்சுமி, நவகிரக ஹோமம் நடந்தது. அன்று மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரதேசபலி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. இன்று காலை 7 மணிக்கு கோபூஜை, விநாயகர் வழிபாடு, மண்டல பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. 9 மணிக்கு மகாபூர்ணஹுதியும், 9.30 ஒன்பது மணிக்கு கலச புறப்படும், 9:45 மணிக்கு விமான கோபுரங்கள் மகா கும்பாபிஷேகமும், பத்து மணிக்கு விநாயகர் வள்ளி, தெவசேனா சமேத திருக்கல்யாண சுப்ரமணியர், சிவபெருமான், நவகிரகங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் மகா தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு சாமி வீதி உலா நடந்தது. பக்தர்களுக்கு தொடர் அன்னதானம் வழங்கினர். விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.