திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இருந்து 4கி.மீ., தொலைவில் உள்ளது இடபழஞ்ஞி. இங்கு குதிரை வாகனத்தில் வீற்றிருக்கும் சாஸ்தா கோயில் உள்ளது. வலக்கையில் அம்பும், இடக்கையில் வில்லும் தாங்கி நிற்கும் இவர் மேற் கூரையின்றி காட்சியளிக்கிறார். ஒவ்வொரு மாதமும் மூன்றாவது சனியன்று இக்கோயிலில் சனிதோஷ நிவர்த்தி பூஜை நடக்கிறது. அப்போது, பக்தர்கள் விளக்கின் முன் அமர்ந்து, அர்ச்சகர் சொல்லும் மந்திரங்களைத் திரும்பச் சொல்கிறார்கள். சாஸ்தாவுக்கு சந்தன முழுக்காப்பும், அவல் நிவேதனமும் செய்யப்படுகிறது. சனிதோஷத்தில் இருந்து விடுவித்து அருளும் இவரை அஸ்வாரூட சாஸ்தாவு என்று அழைக்கின்றனர்.