இஸ்ரேல் நாட்டின் முதல் பிரதமராக இருந்தவர்தான் டேவிட் பென் குரியன். இவர் நாடாளுமன்றத்திற்கு வரும்போதெல்லாம் சூட்கேஸ் ஒன்றையும் கொண்டுவருவார். இதனால் இவர் விமர்சனத்திற்கு உள்ளானார். விலை உயர்ந்த பொருளை சூட்கேஸிற்குள் வைத்துள்ளார் என எதிர்கட்சியினர் சந்தேகித்தனர். ஒருநாள் இதற்காக அமளியிலும் ஈடுபட்டனர். வேறு வழியில்லாமல் அவரும் திறந்து காண்பித்தார். அனைவரும் ஆச்சர்யம் அடைந்தனர். காரணம் அதற்குள் உடைந்து போன கம்பும், பழைய மேலாடையும் இருந்தது. ‘இத்தனை நாளாக இதைத்தான் கொண்டு வந்தீர்களா. இதற்கு காரணம் என்ன’ என பலரும் கேட்டனர். ‘சிறு வயதில் நான் ஆடுகளை மேய்த்தேன். ஆண்டவரின் அருளால் இந்த உயர்வை எட்டியுள்ளேன். எனது பழைய நிலையை மறக்ககூடாது என்பதால்தான் இதை கொண்டு வருகிறேன்’ என்றார். பூர்வ நாட்களை நினை; தலைமுறை தலைமுறையாய்ச் சென்ற வருஷங்களைச் கவனித்துப்பார்;