பதிவு செய்த நாள்
11
ஆக
2012
11:08
தென்காசி: தென்காசி பகுதி கோயில்களில் ஆடி கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு நடந்தது.தென்காசி அருகே கொட்டாகுளம் கீழ்பகுதியில் உள்ள இசக்கியம்மன் கோயிலில் கொடை விழாவை முன்னிட்டு ஆடி கடைசி வெள்ளி சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. அம்பாளுக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. கூழ் காய்ச்சி சிறப்பு பூஜை வழிபாடு நடத்தி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.குத்துக்கல்வலசை முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு காலையில் விநாயகர் மற்றும் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் கோயில் வளாகத்தில் கூழ் காய்ச்சப்பட்டது. அம்பாளுக்கு கூழ் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது. குத்துக்கல்வலசை காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடத்தி பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது. தென்காசி, மேலகரம், குடியிருப்பு, நன்னகரம், குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, வல்லம், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தளம்பாறை, பாட்டாக்குறிச்சி, சுந்தரபாண்டியபுரம், திருச்சிற்றம்பலம், இலத்தூர், சீவநல்லூர், இடைகால், சிவராமபேட்டை, ஆய்க்குடி, சாம்பவர்வடகரை, அச்சன்புதூர், பண்பொழி, கணக்கப்பிள்ளைவலசை, தேன்பொத்தை, புளியரை, கரிசல்குடியிருப்பு, கேசவபுரம், புதூர், கட்டளைகுடியிருப்பு, பகவதிபுரம், தெற்குமேடு, ரவியதர்மபுரம், விசுவநாதபுரம், பெரியபிள்ளைவலசை, பிரானூர், அழகப்பபுரம், அய்யாபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள இசக்கியம்மன், மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் ஆடி கடைசி வெள்ளி சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. இதனால் அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.