பதிவு செய்த நாள்
11
ஆக
2012
11:08
திருநெல்வேலி: பாளை. மேலவாசல் பிரசன்ன விநாயகர் கோயில், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மண்டலாபிஷேக விழா 22ம் தேதி நடக்கிறது. கோயிலில் திருப்பணி நிறைவு பெற்று கடந்த மாதம் 5ம் தேதி கும்பாபிஷேக விழா நடந்தது. இதை தொடர்ந்து 48வது நாள் மண்டலாபிஷேக விழா 22ம் தேதி நடக்கிறது.மண்டலாபிஷேக விழா 20ம் தேதி துவங்குகிறது. அன்று அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசன்ன விநாயகருக்கு லட்சார்ச்சனை, பிரசாதம் வழங்கல் நடக்கிறது. 21ம் தேதி விக்னேஸ்வர பூஜை, சுப்பிரமணிய சுவாமிக்கு லட்சார்ச்சனை, புண்யாகவாசனம், 1008 சங்கு பூஜை, 108 கலச பூஜை, முதல் கால யாகசாலை பூஜை, பிரசாதம் வழங்கல் நடக்கிறது.22ம் தேதி காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, 9 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை, 9.30 மணிக்கு மகாபிஷேகம், 108 கலசாபிஷேகம், 1008 சங்காபிஷேகம், 12 மணிக்கு மண்டலாபிஷேகம், மகா தீபாராதனை, 12.30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை பக்திச்சொற்பொழிவுகள், தேவாரம், பக்தி இன்னிசை, வயலின் கச்சேரி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகக்குழுவினர், வேல்முருகன் வழிபாட்டுக்குழுவினர் செய்து வருகின்றனர்.