ஆடித் திருக்கல்யாணம் : ஜுலை 23ல் ராமேஸ்வரம் கோயிலில் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2022 07:07
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜூலை 23ல் ஆடி திருக்கல்யாண விழா கொடி ஏற்றப்பட உள்ளது.
ராமேஸ்வரம் கோயிலில் முக்கிய விழாவாக ஆடி திருக்கல்யாணம், மாசி சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி நாளை மறுநாள் காலை 10:30 மணிக்கு மேல் கோயிலில் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்புள்ள கொடிக்கம்பத்தில் ஆடி திருக்கல்யாண திருவிழாவுக்கு கொடி ஏற்றப்பட உள்ளது. இதனைதொடர்ந்து ஆக., 8 வரை கோயிலில் ஆடித் திருக்கல்யாண விழாக்கள் நடக்கும். இதில் முக்கிய விழாவான ஜூலை 28ல் ஆடி அமாவாசை யொட்டி அக்னி தீர்த்த கடலில் ராமர் தீர்த்தம் கொடுத்தல், பக்தர்கள் புனித நீராடும் நிகழ்ச்சி நடக்கும். ஜூலை 29ல் பர்வதவர்த்தினி அம்மன் தங்க பல்லாக்கில் வீதி உலா, ஜூலை 31ல் ஆடித்தேரோட்டம், ஆக., 2ல் சுவாமி, அம்மன் தபசு மண்டபத்தில் எழுந்தருளி மாலை மாற்றுதல், ஆக.,3ல் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி, அம்மனுக்கு ஆடித்திருக்கல்யாண விழா விமரிசையாக நடைபெறும். தொடர்ந்து 15 நாட்கள் நடக்கும் ஆடித்திருவிழாவில் முக்கிய நாளில் பர்வதவர்த்தினி அம்மன் தங்கம், வெள்ளி வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும்.