ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே தென்னம்பிள்ளை வலசையில் மயூரநாதப்பெருமான், பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் கோயில் உள்ளது. காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. அர்ச்சகர் உமா மகேஸ்வரன் பூஜைகளை செய்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.