அன்னூர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2022 05:07
அன்னூர்: பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது. அன்னூர், மொண்டிபாளையம் அருகே திம்மநாயக்கன்புதூரில், மகா பைரவர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும், தேய்பிறை அஷ்டமி நாளன்று சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு பைரவருக்கு, பால், தேன், நெய் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து வேள்வி பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னூர் முண்டிபாளையம் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.