சென்னையில் ஸ்ரீபாதகுரு சரிதம் நூல் வெளியீட்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2022 10:07
இந்து மதத்தில் ஆதிகாலம் தொட்டு பலகுருமார்கள் தோன்றி வேதநெறிகளைக்கூறி மக்களை நல்வழிப்படுத்தி வருகிறார்கள். அவ்வழியில் ஶ்ரீபாதஶ்ரீவல்லபர் என்ற மகான் 1930 ம் ஆண்டு ஆந்திரமாநிலம் பீதிகாபுரம் எனும் ஊரில் பிறந்து தமது 14 வது வயதில் துறவுபூண்டு பல அற்புதங்கள் நிகழ்த்தி மக்களைக்காப்பாற்றி தொண்டுசெய்திருக்கிறார். இவரை தத்தாத்ரேய முனிவரின் அவதாரமாக மகான்கள் போற்றியுள்ளனர். முப்பதாவது வயதில் குருவபுரம் எனும் இடத்தில் கிருஷ்ணாநதியில் இறங்கி மறைந்துவிட்டார். இவரிடம் நேரடியாக ஆசிபெற்ற சங்கர்பட் என்பவர் இவரது சரிதத்தை வடமொழியில் எழுதியிருக்கிறார். இந்தி ஆங்கிலம் போன்ற மொழிகளிலேயே மொழிபெயர்ககப்பட்டிருந்த இந்நூலை முதன்முதலில் திருமதி. மாதங்கி பாலாஜி தமிழில் மொழிபெயர்ததுள்ளார். அரியபல தகவல்களையும், நல்வழிகாட்டுதல்களையும் கூறும் இந்நூல் வெளியீட்டுவிழா சென்னை மந்தைவெளி மந்த்ராமஹாலில் நிகழ்ந்தது.
காஞ்சீபுரம் ஸ்ரீசக்ரமேருபீடம் மாதாஶ்ரீ வல்லபானந்தமயீ அவர்கள் நூலை வெளியிட்டு வாழத்துரை வழங்கினார்கள். தமிழக அரசு முன்னாள் தலைமைச்செயலாளர் திரு. கே. சண்முகம் ஐ.ஏ.எஸ், மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாசாரியார், கலைமாமணி நாகைமுகுந்தன் வர்ணனையாளர் ஸ்ரீகவி ஆகியோர் சிறப்புறை ஆற்றினர். மயிலாடுதுறை தொழிலதிபர் திரு. விஜயகுமார் மற்றும் எஸ். ஆர். பாலாஜி வரவேற்றனர். நூலாசிரியர் திருமதி. மாதங்கிபாலாஜி ஏற்புரை வழங்கினார்.