காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், பல்லவர்மேடு மேற்கு பகுதி, ஆகாய கன்னியம்மன் கோவிலில், 32வது ஆண்டு ஆடித்திருவிழா நடந்தது. காஞ்சிபுரம் பல்லவர்மேடு மேற்கு பகுதியில், ஆகாய கன்னியம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 32 ம் ஆண்டு ஆடித்திருவிழா நடந்தது.காலை 6:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு அபிேஷகமும், 7:00 மணிக்கு தாயார் குளத்தில் இருந்துசென்று சக்தி கரகம் கொண்டு வரப்பபட்டது.
காலை 11:30 மணிக்கு பக்தர்கள் முதுகில் அலகுகுத்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதியுலா நடந்தது.பகல் 12:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தலும், இரவு 7:00 மணிக்கு புஷ்ப விமானத்தில் எழுந்தருளிய ஆகாய கன்னியம்மன் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார். வீதியுலா முடிந்ததும், அம்மனுக்கு கும்பம் படையலிடப்பட்டு மஹாதீப ஆராதனை நடந்தது.ஏற்பாடுகளை பல்லவர்மேடு மேற்கு பகுதி மக்கள், கோவில் நிர்வாகிகள், இளைஞர்கள், விழாக்குழுவினர் இணைந்து செய்திருந்தனர்.