ஊத்துக்கோட்டை: ஜாத்திரையையொட்டி, மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊத்துக்கோட்டையில், இரு தினங்களாக ஜாத்திரை கோலாகலமாக நடந்தது.
முன்னதாக, கடந்த 17ம் தேதி ஏரிக்கரை அருகே உள்ள கிராம தேவதை செல்லியம்மன், பூந்தோப்பில் உள்ள அங்காளம்மன், ரெட்டித் தெருவில் உள்ள எல்லையம்மன் ஆகிய கோவில்களில், பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.அடுத்த இரு தினங்கள் அலங்கரிக்கப்பட்ட கரகம் முக்கிய வீதிகள் வழியே வலம் வந்தது. நேற்று முன்தினம் குயவர்கள் வீட்டில் இருந்து அம்மன் அலங்கரிக்கப்பட்டு, வண்ணார் வீட்டிற்கு வந்தது. அங்கு மாரியம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.நேற்று மாலை விழா முடிந்து, மாரியம்மன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலையில் கரைத்தனர்.