ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் 3ம் நாள் ஆடித்திருவிழா யொட்டி பர்வதவர்த்தினி அம்மன் தங்க பல்லக்கில் எழுந்தருளி, வீதி உலா வந்தார்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண விழா ஜூலை 23ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. 3ம் நாள் ஆடித் திருவிழாவான இன்று காலை 9:40 மணிக்கு கோயிலில் இருந்து பர்வதவர்த்தினி அம்மன் புறப்பாடாகி அலங்கரித்த தங்கப்பல்லக்கில் எழுந்தருளியதும், கோயில் ரதவீதியை சுற்றி அம்மன் உலாவரும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது வீதியெங்கும் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் பர்வதவர்த்தினி அம்மனை தரிசனம் செய்தனர். நேற்று இரவு 8:30 மணிக்கு தங்க காமதேனு வாகனத்தில் பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளி, வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.