பதிவு செய்த நாள்
27
ஜூலை
2022
12:07
ஆரல்வாய்மொழி: ஆரல்வாய்மொழி முப்பந்தல் அருள்மிகு ஆலமூடு அம்மன் திருக் கோவில் ஆடி கொடை விழா மிக சிறப்பாக நடைபெற்றது. கொடை விழாவை முன்னிட்டு காலையில் மகா கணபதி ஹோமம், அபிஷேக குடங்களுடன் வடக்கூர் அகலிகை ஊற்று பிள்ளையார் கோவிலிலிருந்து யானைகள் ஊர்வலம், பால்குட பவனி, பறவை காவடி ஆகியவற்றை ஆரல்வாய் மொழி பேரூராட்சி மன்றத்தலைவர் முத்துக்குமார் கோவில் நிர்வாகி அருணாசலம் முன்னிலையில் துவக்கி வைத்தார். அம்மன் சன்னதியில் 108 கலச விளக்கு பூஜை நடை பெற்று அபிஷேக நிகழ்ச்சி நடந்தது. அன்னதான நிகழ்ச்சியை எம்எல்ஏ., தளவாய்சுந்தரம் துவக்கி வைத்தார். நாகர் கோவில் எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி கலந்து கொண்டார். சுவாமிகள் பாயாச குளியல், அலங்கார தீபாராதனை , அக்னிச்சட்டி எடுத்தல், அம்மன் தேரில் பவனி வருதல் மற்றும் குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பூக்குழி திருவிழா இரவு நடை பெற்றது. பின்பூக்குழி இறங்குதல், ஊற்று படைத்தல் ஆகியவை நடந்தது. ஏற்பாடுகளை, ஸ்ரீஆலமூடு அம்மன் சாரிட்டபிள்டிரஸ்ட் தலைவர் டாக்டர் அருணாசலம் மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் சேவா சங்கம், விழா குழுவினர் செய்துள்ளனர்.