பதிவு செய்த நாள்
27
ஜூலை
2022
04:07
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீசெல்லாண்டியம்மன் கோவில், ஆடிக்குண்டம் திருவிழாவில், ஓம் சக்தி... பராசக்தி கோஷத்துடன், பக்தர்கள் பரவசத்துடன் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். திருப்பூரின் காவல்தெய்வம் என்று போற்றப்பட்டு, நொய்யல் கரையில் அமைந்துள்ள ஸ்ரீசெல்லாண்டியம்மன் கோவிலில், 16ம் ஆண்டு குண்டம் திருவிழா, 15ம் தேதி பூச்சாட்டு வழிபாட்டுடன் துவங்கியது. மகாமுனி பூஜை, சக்தி அழைத்தல், முனியப்பன் கோவிலில் இருந்து சூலம் எடுத்து வருதல்.டவுன் மாரியம்மன் கோவிலில் இருந்து பூவோடு எடுத்து வருதல், சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலம், என, பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம், இரவு, குண்டத்துக்கு அக்னி இடப்பட்டது.நேற்று காலை, தலைமை பூசாரி, கோவில் நிர்வாகிகள் குண்டம் இறங்கினர். தொடர்ந்து, நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், பக்தர்கள் ஓம் சக்தி... பராசக்தி கோஷத்துடன் குண்டம் இறங்கினர். மதியம் சிறப்பு அலங்கார பூஜையும், மாலையில், மாவிளக்கு ஊர்வலமும், பூப்பல்லக்கில் அம்மன் திருவீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று, மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை ஆடி அமாவாசை சிறப்பு அபிேஷக பூஜைகளும் நடைபெற உள்ளது.திருப்பூர், நொய்யல் ஆறு செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் குண்டம் இறங்கினர்.